ஒரு படகு கடலில் புயலில் சிக்கி திசை மாறி சென்று விட்டது. படகோட்டிகளுக்கு கடும் களைப்பால் தாகம் வாட்டியது. அப்போது எதிரே ஒரு படகு வர தண்ணீர் கேட்பதற்காக வெள்ளைக் கொடியை வீசி அதை அழைத்தனர். அந்தப் படகும் இவர்களை நெருங்கி வந்தது. தங்கள் நிலையைச் சொல்லி படகோட்டிகள் தண்ணீர் கேட்டனர். “நண்பர்களே! நீங்கள் கடலில் தான் செல்கிறீர்கள். ஆனால் நீங்கள் இப்போது இருப்பதோ கடலுக்குள் பாயும் அமேசான் நதிக்குள். இது நல்ல தண்ணீர். நீங்கள் வேண்டுமளவு நல்ல தண்ணீர் குடிக்கலாமே!” என்றனர். கடலுக்குள் பயணித்தாலும், அதற்குள் நல்ல தண்ணீர் இருந்தும் படகோட்டிகளுக்கு விபரம் தெரியவில்லை. இது போல நமக்குள் பல திறமைகள் இருந்தும் நாம் உணர்வதில்லை. இந்த உண்மை தெரிந்தால் வானம் கூட நம் வசமாகும்.