புதுச்சேரி: சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று நடந்த சனி மகா பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமி கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் மங்கள திரவியங்களால் மகா அபிேஷகம் நடந்தது. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சனி மகா பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன் மற்றும் தேவஸ்தான குருக்கள் செய்திருந்தனர்.