அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் என்பவர் வியாழக்கிழமை தோறும் மக்களுக்கு அறிவுரை வழங்குவார். அப்போது ஒருவர், “எங்களுக்கு தினமும் அறிவுரை சொல்லுங்கள்’’ என்றார். அதற்கு ணஅப்துல்லாஹ், “நாள்தோறும் உரையாற்றினால் சலிப்படைவீர்கள். அதை நான் விரும்பவில்லை. நாயகத்தைப் போல நானும் இடைவெளி விட்டு அறிவுரை வழங்க விரும்புகிறேன்’’ என்றார். மக்களுக்கு உபதேசம் செய்பவர்கள் இவர்களைப் போல செயல்பட வேண்டும். மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயி மழை பெய்தவுடன், பூமியை பக்குவப்படுத்துவதில் இறங்குவது போலவும் இருக்கவேண்டும். வாய்ப்பு கிடைத்தும், தன் கண்ணியத்தைக் காப்பதாக எண்ணிப் பேசாமல் இருப்பதும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவதும் சரியானதாகாது.