பதிவு செய்த நாள்
09
மார்
2020
03:03
இயேசுவின் சீடர்களான பிலிப்பு, பேதுரு, யோவான் ஆகியோர் சமாரியா நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்த காலத்தில், அங்குள்ள நோயாளிகளைக் குணப்படுத்தவும் செய்தனர்.
அப்பகுதியில் சீமான் என்ற மந்திரவாதி, பணம் பெற்றுக் கொண்டு மக்களின் நோயைப் போக்கி வந்தான். பிலிப்புவும், அவரது நண்பர்களும் இலவசமாக சிகிச்சை செய்ததால் சீமான் பக்கம் யாரும் செல்லவில்லை. வருமானம் குறைந்தது. பிலிப்புவிடம் சென்று தொழில் கற்க விரும்புவதாக தெரிவித்தான். ஆனால் என்ன முயற்சித்தும் சீமானுக்கு பலன் கிடைக்கவில்லை.
“நான் உங்களுக்கு பணம் தருகிறேன். நீங்கள் செய்யும் அற்புதத்தின் ரகசியங்களை கற்றுக் கொடுங்கள்,” என ஆசை காட்டினான்.
“ யார் ஒருவர் பலன் கருதாமல் மக்களுக்கு உதவுகிறாரோ, அவருக்கே அற்புதம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நீ எங்களுக்கு பணத்தாசை காட்டினாய். எனவே உன்னிடமுள்ள பணம் அழியும். நீயும் அழிவாய்’’ என்று சொல்லி விரட்டினர்.
எவரும் வல்லமையை பணத்தால் பெற முடியாது.