மணக்குள விநாயகர் கோவிலுக்குள் வெளிநாட்டினர் நுழைய தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2020 01:03
புதுச்சேரி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் மற்றும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு, வெளிநாட்டினர் வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் வேகமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் மற்றும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரிகின்றனர். புதுச்சேரி மாநிலத்திற்கு அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டவர்கள், குடியேறிய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை புரியும் இந்தியர்கள் நம்நாட்டிற்குள் நுழைந்த பின்பு 28 நாட்களுக்கு கோவிலுக்கு வருவதை தவிர்க்கும்படி கோவில் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.