* சனி பகவான் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டு காலம் ஆகும். * ஆயுள்காரகன் எனப்படுவரான சனிபகவான் தான் ஒருவருக்கு நீடித்த ஆயுளை தருகிறார். * முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப தண்டனை அளித்து பாவங்களை தீர்ப்பவர். * காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததால் ‘சனி ஈஸ்வரர்’ என்னும் பட்டத்தை பெற்றார். * ஒருவரது ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலையில் இருந்தால் மக்கள் செல்வாக்கை பெறலாம். அரசியல் தலைவராகும் யோகம் உண்டாகும். * அந்நிய மொழி புலமை, அறிவியல், மருத்துவத் துறையில் புகழ் ஆகியன சனிபகவானின் அருளால் கிடைக்கும். * சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி வழிபட கொடிய நோய்களில் இருந்து விடுபடலாம். * தினமும் காகத்திற்கு சாதமிட்ட பிறகு உண்பதன் மூலம் சனிதோஷம், பிதுர்தோஷம் மறையும். * சனிக்கிழமையில் அனுமனை தரிசித்தால் சனிபகவானால் ஏற்படும் தீமைகள் விலகும். * சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபட வறுமை நீங்கி செல்வம் பெருகும். * தினமும் சிவனை வழிபடுவோருக்கு சனிபகவான் நற்பலன்களை வாரி வழங்குவார்.