கொரோனா வைரஸ் அச்சம்: வீட்டு வாசலில் சாணம் தெளிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2020 04:03
நாமக்கல்: கொரோனா பாதிப்பு அச்சத்தால் நாமக்கல் நகர் பகுதியில் உள்ள வீட்டு வாசல்களில், கிருமி நாசினியாக சாணம் தெளிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது நகர் பகுதியில் உள்ள பல வீடுகளில் வாசலில் பாத்திரம் வைத்து மஞ்சள், சுண்ணாம்பு, வேப்பிலை, மாவிலை உள்ளிட்ட கலவை தண்ணீரை கிருமி நாசினியாக வைத்து வருகின்றனர். தற்போது பல வீடுகளில் கிரமத்தில் செய்வதை போல், மாட்டு சாணத்தை வாசலில் தெளித்து வருகின்றனர். இதுகுறித்து, இல்லத்தரசி ஒருவர் கூறியதாவது: நாமக்கல் நகரில் கொரோனா அறிகுறி உள்ளதாக தகவலறிந்தோம். அதனால், எங்கள் வீட்டு வாசலிலும் சாணம் தெளித்து நோய் தொற்றை தடுத்து வருகிறோம். நகர் பகுதியாக உள்ளதால், மாட்டு சாணம் கிடைப்பது அரிதாக உள்ளது. தடை உத்தரவால் கிராமப்பகுதியில் சென்று எடுத்துவர முடியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.