தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த பங்குனி பொங்கல் திருவிழாவை பொதுமக்கள் ஒத்தி வைத்துள்ளனர். தேவதானப்பட்டியை மையப்படுத்தி உள்ள எருமலை நாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி, நல்ல கருப்பன் பட்டி, சங்கரமூர்த்தி பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ரங்கநாதபுரம், அ. வாடிப்பட்டி , கெங்குவார்பட்டி, ஜி. கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க மததிய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பங்குனி பொங்கல் விழாக்கள் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கூடங்குக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தோடு மேலே உள்ள அனைத்து கிராமங்களிலும் பங்குனி பொங்கல் விழாவை பொதுமக்கள் ஒத்தி வைத்துள்ளனர்.