பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
10:04
திருவண்ணாமலை : கொரோனா வைரஸ் நோய் தாக்கம் குறைய வேண்டி, நாதஸ்வர கலைஞர்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன், சங்கராபரணம் வாசித்து வழிபாடு நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில், கிரிவல நாதஸ்வர தவில் இசை சங்கம் சார்பில், அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர், சமூக விலகலை கடைபிடித்து, அருணாசலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் முன்புறம், அருணாசல சிவா துதி மற்றும் சங்கராபரணம் பாடலை, நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்து பாடி, கொரோனா வைரஸ் நோய் தாக்கம், இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். கொரோனாவால், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி பிரார்த்தனை செய்து, வாசித்து வழிபாடு நடத்தினர்.