வேடசந்தூர் கிறிஸ்த்துவ மக்கள் புனித வெள்ளி அனுசரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2020 12:04
வேடசந்தூர்: இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கிறிஸ்த்துவ மக்களால் அனுசரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் பெரிய வியாழனும், நேற்று பெரிய வெள்ளியும் ( புனித வெள்ளி) கிறிஸ்த்துவ மக்களால் அனுசரிக்கப்பட்டது. இயேசுநாதரை சிலுவையில் அறைதல், சிலுவையை சுமத்தல் உள்ளிட்ட 14 நிலைகளில் ஜெபம் செய்யப்பட்டது. கிறிஸ்த்துவ மக்கள் 40 நாட்கள் விரதமிருந்து ஜெபம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிறன்று (நாளை) உலகெங்கும் உள்ள கிறிஸ்த்துவ மக்களால் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட உள்ளது. கொரானோ பாதிப்பால் போடப்பட்ட 144 தடை உத்தரவு காரணமாக, கிறிஸ்த்துவ மக்கள் வீடுகளிலேயே இறை வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.