கடலூர்: கடலூர் விட்டகுப்பம், அப்பர் கோயிலில் அப்பர் கரையேறிய விழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கடலூர், விட்டகுப்பத்தில் அப்பர் கரையேறிய வரலாற்று லீலை நடைபெற்றது. சைவ குறவர்களின் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசர் சைவ சமயத்தின் சிறப்புகளை பாடி வந்தார். அதனை அறிந்த சமண சமயத்தைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவ மன்னன் உத்தரவின் பேரில் திருநாவுக்கரசர் கல்லில் கட்டி கடலில் வீசப்பட்டார். அப்போது திருவாவுக்கரசர் ‘சொற்றுணை வேதியன்’ எனத்தொடக்கும் நமச்சிவாய பதிகத்தை ஓதியபடி கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலூர், வண்டிப்பாளையத்தில் கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளிவரும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை வழிபட்டார். இந்த வரலாற்று பெருவிழா ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாத அனுஷ நட்சத்திரத்தன்று பாடலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சித்திரை அனுஷ நட்சத்திரத்தையொட்டி அப்பர் கரையேறிய வரலாற்று லீலை நடந்தது. அதனையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் விழாவில் புரோகிதர்களை தவிர, மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.