பதிவு செய்த நாள்
13
ஏப்
2020
12:04
சென்னை : ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, பூட்டிய சர்ச்சுகளில், சிறப்பு வழிபாட்டை, கத்தோலிக்க பாதிரியார்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்தினர்.சி
லுவையில் அடித்து மரித்த பின், இயேசுபிரான் மூன்றாவது நாள் உயிர்தெழும் தினத்தை, ஈஸ்டர் பண்டிகையாக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையான நேற்று, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி உட்பட, தமிழகத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க சர்ச்சுகளும் பூட்டப்பட்டு இருந்தன.ஆனால், பிஷப், பாதிரியார்கள் மட்டும் பங்கேற்ற திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு, நேற்று முன்தினம் நள்ளிரவில் துவங்கி, நேற்று அதிகாலை, 2:00 மணி வரை நடந்தது.
சென்னை சாந்தோம் சர்ச்சில், சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட பிஷப், ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்துவர்கள் தங்கள் வீடுகளில், மெழுகுவர்த்தி ஏந்தி, டிவி வாயிலாக, திருப்பலியை கண்டுகளித்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.கொரோனா நோய் பாதிப்பில் இருந்து, உலக மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; வைரஸ் கிருமி அழிய வேண்டும் என, மரியாளிடம், போப் பிரான்சிஸ் வேண்டுகிற ஜெபத்தை, பூட்டிய சர்ச்சுகளில், பாதிரியார்கள் வெளியிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தி, பிரார்த்தனை செய்தனர்.