ஆண்டவரின் படைப்பில் ஆச்சரியம் தரும் விஷயங்கள் எத்தனையோ உண்டு. காக்லிபர் என்றொரு விதையின் சிறப்பு என்னவென்றால் விதைகள் அடங்கிய பழம் முற்றி நெற்றானதும், அதன் மேற்பரப்பில் உள்ள ஒட்டுப்புல்லின் உதவியுடன் இடம் பெயரும். மிருகங்கள் அதன் மீது பட்டவுடன் ஒட்டும் இது எளிதில் விழாது. இதனால் வெகு துாரத்தில் சென்று மண்ணில் விதையாக விழ வாய்ப்பு உண்டாகும். இன்னொரு சிறப்பும் இதற்கு உண்டு. இதற்குள் 5 விதைகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வருட வித்தியாசத்தில் முளைவிடும்.
இந்த விதை பற்றி விளக்கம் அளித்த கிரகாம் ேஹாட்ஜஸ் என்பவர், நல்ல விஷயங்களில் ஈடுபடும் போது அதற்கான பலன் உடனடியாக கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் கவலைக்கு ஆளாகிறோம். அதை விடுத்து பொறுமையோடு காத்திருக்க வேண்டும். காக்லிபர் விதை போல முளைக்க ஓராண்டோ அதற்கும் மேலோ காலவேறுபாடு ஏற்படலாம். அதற்காக முயற்சியைக் கைவிடக் கூடாது. ஆண்டவரை நம்பி விதைத்தல் என்னும் செயலில் ஈடுபடுங்கள். விளைச்சல் தருவது அவர் பொறுப்பு. இதுவே காக்லிபர் சொல்லும் பாடம்.