உற்சாகம் தருகிறார் மகாவீரர் * நோயாளிக்குச் சேவை புரிவதில் சிறிதும் வருந்தாமல் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். * யாரிடத்தில் பேராசை உண்டாகிறதோ அவர்களை நாலாபுறமும் தீமைகள் தேடிவரத் தொடங்கிவிடும். * கோபம், பொறாமை, நன்றியின்மை, வீண்பிடிவாதம் இந்த நான்கு தீயகுணங்களும் மனிதனின் நற்குணத்தை அழித்துவிடும். * நல்லவர்கள் பாவங்களைச் செய்ய அஞ்சுவர். பாவம் செய்வதால் அதற்கான தண்டனையிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. * பேசுவதற்கு முன் பலமுறை யோசனை செய்யுங்கள். மற்றநேரங்களில் மவுனத்தையே கடைபிடிப்பது நல்லது. * பிறரது குற்றங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது கூடாது. இதனால் நம்மை நாமே கீழ்நிலைக்கு தள்ளிச் செல்கிறோம் என்பதை உணரவேண்டும். * எதிர்பாராத ஆபத்து, தீராத நோய், முதுமை, மரணம் இவற்றைக் கண்டு அஞ்சாமல் வெற்றிநடை போடுபவனே வெற்றிவீரன்.