Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் ... பிரதோஷ வழிபாட்டை ஆன்-லைனில் தரிசித்த பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டை ஆன்-லைனில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூய்மையானது கங்கை நதி ; குடிநீராக தரமும் உயர்ந்தது
எழுத்தின் அளவு:
தூய்மையானது கங்கை நதி ; குடிநீராக தரமும் உயர்ந்தது

பதிவு செய்த நாள்

21 ஏப்
2020
11:04

வாரணாசி : கொரோனா ஊரடங்கால் மாசு இல்லாத காரணங்களால் கங்கை நதி தூய்மையாக உள்ளது. இது குடிப்பதற்கு ஏற்ப தரம் உயர்ந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயிரக் கணக்கான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்களும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. 7 புனித நகரங்களுள் ஒன்றான வாரணாசி (காசி) யில் கங்கை நதி உள்ளது. காசி புண்ணிய ஸ்தலம் என்பதால் பலரும் கங்கையில் நீராடி செல்லுவர். மேலும் இறந்தவர்களின் உடல்களையும் கங்கையில் வீசுவதையும் காணமுடிகிறது.

அதுமட்டுமின்றி பல தொழிற்சாலைகளின் கழிவுகள் , குப்பைகள் மற்றும் , பூஜை பொருட்கள், மனிதர்களின் அசுத்தமுறை போன்றவற்றால் கங்கை நதியின் தூய்மை மாசடைந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசும் மாநில அரசும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதனால் தற்போது ஊரடங்கு காலங்களில் கங்கை நீர் சுத்தமாக உள்ளது. கங்கை நதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீரின் தரத்தை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், நேற்று முன்தினம் சோதனை செய்தது.

அப்போது, நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதும், மக்கள் குடிப்பதற்கு தகுதி வாய்ந்த நீராக, கங்கையில் பல பகுதிகள் மாறி இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இது குறித்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த தலைவர் கூறியதாவது: இந்த முழு அடைப்பு காலகட்டத்தில், கங்கை நதியின் பெரும்பாலான பகுதிகளில், நீரின் தரம் பலமடங்கு உயர்ந்துள்ளது உண்மை தான். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பது தான். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப் படும் கழிவு நீர், நதிகளில் கலப்பதும், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கழிவு நீரை நதிகளில் கலக்க செய்வதுமே, பெரும்பாலான நதிகள் மாசு அடைவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும்,தொழிற்சாலைகளில் தேவைகளுக்காக, கங்கையில் இருந்து நீர் எடுப்பதும் நின்றுள்ளது. அறுவடை காலம் என்பதால், விவசாயத்திற்கு நீர் எடுக்கப்படவில்லை. இதனால், நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. இயற்கையை சீண்டாமல், அதன் போக்கிலேயே விட்டுவிட்டால், அது மீண்டும் தன் இயல்பு நிலையை எட்டும் என்பதற்கு, இது மிக சிறந்த உதாரணம். ஊரடங்கு காலகட்டத்தில், கங்கை மற்றும் யமுனை நதிகளின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை, வாரியம் விரைவில் வெளியிடும். நதிகளை மாசு இன்றி பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar