பதிவு செய்த நாள்
22
ஏப்
2020
10:04
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கோவில் அர்ச்சகர்களுக்கு, இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.அனைத்து கோவில்களும் மூடப்பட்டு, பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டுமே நடந்து வருகின்றன.
மேலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடத்தப்படாததால், சிறிய கோவில்களின் அர்ச்சகர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.இந்நிலையில், தஞ்சாவூர், அய்யங்கடை தெரு பள்ளிவாசல் இமாம் ஏற்பாட்டின்படி, ரசாஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில், அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதன்படி, தஞ்சாவூர் வடக்கு வீதி விநாயகர் கோவில் பகுதியில் உள்ள, 15 கோவில் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு, தலா, 800 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.