சென்னை ராமகிருஷ்ண மடம் சார்பில் கொரானா நிவாரண சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2020 01:04
சென்னை: சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் பல்வேறு கொரானா நிவாரண சேவை செய்து வருகின்றனர். நிவாரண சேவையில் 20ம் தேதி சென்னை அடையாறு சரக காவல் துறை துணை ஆணையாளர் அவர்களிடம் காவல் துறை பயன்பாட்டிற்காக முக கவசம் பண்டல்கள் (2850 எண்ணிக்கை) மற்றும் சானிடைசர் மடம் சார்பாக வழங்கப்பட்டது. இன்று 350 ஆட்டோ டிரைவர் மற்றும் போர்ட்டர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வகைகள் கொடுக்கப்பட்டது. இதில் சுவாமி விமூர்த்தானந்தர் மற்றும் பல சுவாமிகள் கலந்து கொண்டனர்.