திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2020 10:04
காரைக்கால்: காரைக்காலில் கொரோனா எதிரொலி திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாக அதிகாரி ஆதாஷ் கூறியுள்ளார்.
காரைக்கால் திருநள்ளாறு உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் அருள்பாலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சனிபகவான் மற்றும் அதைச் சுற்றியுள்ள அய்யனார்.பிடாரி. சீதளாதேவி உள்ளிட்ட ஆலயங்களில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜீன் 5ம் தேதி முடிவடைகிறது. விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆலய சிவாச்சாரியார்கள்.பூசாரிகள். ஊழியர்கள் தேவஸ்தான ஐந்து கிராமத்தினர் மற்றும் இதர பகுதி கிராமத்தினர் ஆகியோர் பங்களிப்போடு நடைபெறும்.மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்தி சகோபுரம் வீதி உலா. செண்பக தியாகராஜ உன்மத்த நடனம். தேர் திருவிழா.சனிபகவான் வீதி உலா மற்றும் தெப்பம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிககாணப்பட்டு வரும் நிலையில் உலகத்தை அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பக்தர்கள் தரிசனம் விழா மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவிழா முக்கிய ஆரம்ப விழா கொடியேற்றம் நடத்த இயலாத காரணத்தால் மேற்படி கொடியேற்ற விழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விழாவின் கொடியேற்றத்தை தொடர்ந்து வரும் அனைத்து முக்கிய நிகழ்ச்சி விநாயகர்.சுப்பிரமணியர் உற்சவம் மற்றும் செண்பக தியாகராஜ உன்மத்த நடனம். தேர் திருவிழா. சனிபகவான் வீதியுலா.தெப்ப உற்சவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் ஆதாஷ் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.