திருநள்ளாறு சனீஸ்வரன் அபிஷேக, ஆராதனை நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2020 10:04
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் சனிக்கிழமையில் அபிஷேகம் மற்றும் ஆராதனை இணையத்தளம் மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய இயலாத நிலையில் பக்தர்களின் வசதிக்காகவும் உலக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப அனுக்கிரக மூர்த்தியாக உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் அபிஷேகம் ஆராதனைகளை கோவில் நிர்வாகம் சார்பில் தேவஸ்தான வலைப்பக்கத்தில் (www.thirunallarutemple.org) இணைக்கப்பட்டுள்ள https://www.youtube.com/watch?v=yErGm0qmnq4 சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதை பொதுமக்கள் பார்த்து சனீஸ்வர பகவான் அபிஷேக ஆராதனை கண்டு கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.