வாழ்வுக்கு தேவையான நல்லுரைகளை நாயகம் சொல்வதைக் கேளுங்கள். * உங்களை படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் உங்களைப் போன்ற மனிதர்களை நேசியுங்கள். அப்போது தான் இறைவனின் நேசம் கிடைக்கும். * ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனது நண்பனைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவனும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான். * உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறுங்கள். இவ்வாறு செய்வது மனதிலுள்ள பொறாமையை அழித்து விடுகிறது. * தன்னுடைய நண்பரிடத்தில் சிறந்தவராக நடப்பவரே இறைவனுக்கு பிடித்தமானவர். * நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஏனெனில் ஒருநாள் அவர்கள் விரோதிகளாகக் கூடும். விரோதிகளை அதிகமாகப் பகைக்காதீர். ஒருநாள் அவர்கள் தோழராகக் கூடும். * இறைவன் ஒருவனை அழித்து விட நினைத்தால், அவனிடமிருந்து வெட்கத்தை பறிக்கிறான். வெட்கத்தை இழந்தவன் நேர்மையில் இருந்து விலகி மோசடிக்காரன் ஆகிறான்.