பதிவு செய்த நாள்
26
ஏப்
2020
12:04
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம், பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகம் முழுவதும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குருக்கள், பட்டாச்சாரியார்கள், வைதீக காரியங்கள் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரண உதவிகளை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் செய்து வருகிறது. சென்னை மாவட்ட அமைப்பின் சார்பில், 10 நாட்களாக, தினமும், 100 பேருக்கு அன்னதானம், 1,100 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், 1,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் நிவாரண நிதிக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோவையில், வெளி மாநில தொழிலாளர்கள், 1,000 பேருக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, பல மாவட்டங்களிலும், பாதிக்கப்பட்ட பிராமணர்களுக்கு, சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள், தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.