சீர்காழி குட்டியாண்டவர் கோயிலில் உண்டியல் உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2020 02:04
சீர்காழி அருகே மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து ரூ 50 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ராதாநல்லூர் கிராமத்தில் அருள்மிகு குட்டியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடிமாதம் 10 நாட்கள் திருவிழா நடை பெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது பக்தர்கள் அங்கு உள்ள உண்டியலில் தங்களது நேர்த்திக்கடனுக்கு ஏற்றவாறு காணிக்கை செலுத்துவார்கள். மேலும் இந்த கோயிலில் சுவாமியை குலதெய்வமாக வணங்குபவர்கள் தங்களது வீட்டு திருமணம்ஈ கா துகுத்து போன்ற நிகழ்ச்சிகளையும் இக்கோலிலேயே நடத்துவது வழக்கம். கொரோனா, ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதாலும், கோயிலில் பக்தர்கள் வழி பட தடை விதிக்கப்பட்டதாலும், இந்த கோயிலில் ஒருகால பூஜை மட்டும் நடந்துவருகிறது. மற்ற நேரங்களில் இந்த கோயில் அமைந்துள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் இரு ப்பதில்லை. இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு வந்த பூசாரி கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் கோயில் தர்மகர்த்தா பழனிவேல்(28) என்பவர் அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் விசாரனை மேற் கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் உண்டியல் சில மாதங்களாக திறக்கப்படாததால் அதில் ரூ 50 ஆயிரம் வரை பணம் இரு ந்நதாக கூறப்படுகிறது.