ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2020 01:04
மயிலாடுதுறை :திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் பங்கேற்றார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பிரம்ம தீர்த்தக்கரையில் திருமுலைப்பால் விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது. அதனால் வழக்கம் போல பூஜைகள் நடத்த அனுமதித்துள்ளது. தொடர்ந்து பல நுாற்றாண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சி இவ்வாண்டு தடைபடக் கூடாது என்ற நோக்கில் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி திருஞானசம்பந்தரை மலைக் கோவிலில் உள்ள தோணியப்பர் சன்னதியில் எழுந்தருளச் செய்து, ஆகம விதிகளின்படி தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் தேவார பதிகம் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரம் ஓத, உமையம்மை திருஞானசம்பந்தருக்கு தங்கக் கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. இதில் திருமடத்து நிர்வாகிகள் மற்றும் கோவில் சிப்பந்திகள் மட்டுமே பங்கேற்றனர்.