திருப்பூர், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவிலில் அக்னி நட்சத்திரம் துவங்கியதை தொடர்ந்து, தாராபாத்திரம் வைக்கப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டுள்ளது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், வரும், 4ல், தொடங்கி, 28ல், முடிகிறது. இந்த நாட்களில், சுவாமியின் திருமேனியை குளிர்வித்து, எல்லா ஜீவராசிகளை பாதுகாக்கவும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை வேண்டியும் காசி விஸ்வநாதர் கோவிலில் தாராபிஷேகம் நடைபெறுகிறது.