சித்திரைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியையொட்டி வரும் நாள் விசேஷமாகத் திகழும் அவ்வகையில், சித்ரா பவுர்ணமியும் உன்னதமானது. அம்பாள் வழிபாட்டுக்கும் சித்த புருஷர்களை வணங்கித் தொழவும் உகந்த திருநாள் இது. சித்ரா பவுர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்துகொண்டாள்.
சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சப்தமி அன்று. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது, சித்ரகுப்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு முதல் நாள் அன்று விரதம் இருந்து, அன்று இரவு கலச ஸ்தாபனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். விரத நாளன்று அதன் மகிமையைச் சொல்லும் (முருகனுக்கு சிவனாரால் அருளப் பெற்ற) திருக்கதையைப் படிப்பது விசேஷம். இதனால் நம் பாவச்சுமைகள் குறையும் என்பது ஐதீகம்.
பூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.