பதிவு செய்த நாள்
07
மே
2020
04:05
நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படும் வேளையில் ‘தென் அ ேஹாபிலம்’ என அழைக்கப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம்.
அ ேஹாபிலத்தில் ஹிரண்யனை அழித்தபின், உக்கிரம் தனியாமல் நரசிம்மர் அலைந்தார். ஹிரண்யனின் கொடுமைக்குப் பயந்து காடுகளிலும், மலைகளிலும் ஒளிந்து தவமிருந்த விஷ்ணு பக்தியுடைய முனிவர்கள், தங்களை காப்பாற்றிய நரசிம்மரின் தரிசனம் காண விரும்பினர். ஆனால், நரசிம்மரின் உக்கிரத்தை தாங்க முடியுமா என சந்தேகித்த முனிவர்கள் மகாலட்சுமி தாயாரை வேண்டினர். அவள் நரசிம்மரின் மடியில் அமர்ந்து அவரி்ன் உக்கிரத்தை தணித்தாள். இதன் அடிப்படையில் நரசிம்மருக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
நரசிம்மரின் மடியில் அமர்ந்துள்ள லட்சுமி தாயாரை ‘அமிர்தவல்லி’ என்கின்றனர். இந்த தாயாரை வணங்கினால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் இருவரது உருவமும் சம அளவில் உள்ளது. லட்சுமி நரசிம்மரை வணங்குபவர்களுக்கு செல்வமும், வீரமும் சிறந்து விளங்கும்.
நவக்கிரக மண்டபத்தில் சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் சுற்றிலும் இருப்பதைப்போல், இத்தலத்து நரசிம்மர் நாயகனாக நடுவில் அருள, சுற்றிலும் எட்டு நரசிம்மர் தலங்கள் உள்ளன. இத்தலங்கள் நவநரசிம்மர் தலங்கள் எனப்படுகின்றன.
சுவாதி நட்சத்திர நாளில் சுதர்சன ேஹாமம், தன்வந்திரி ேஹாமம் நடக்கிறது. தொழில் வளர்ச்சி அடைய, நோய் குணமாக, வியாபாரத்தில் தேவையற்ற போட்டிகள் குறைய பக்தர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். பிரகாரத்தில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர், வேணுகோபாலன், விஷ்வக்சேனர், அதிபன் சடகோபன் உள்ளனர்.
விசேஷ நாட்கள்
சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
நேரம்
காலை 6:00 – பகல் 12:30 மணி, மாலை 4:00 – இரவு 8:00 மணி
செல்வது எப்படி
விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ., துாரத்தில்
தொடர்புக்கு
0413 – 269 8191, 94439 59995