நாகபட்டினத்தில் பிறந்தவர் அதிபத்தர். மீனவரான இவர் வலையில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது வழக்கம். கடலில் மீனை விடும் போது, ‘‘ஆதிபுராணரை அடைந்திடுக’’ என்று சொல்லி விடுவார். இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருநாள் பொன் மீன் ஒன்றை வலையில் சிக்க வைத்தார். ஏழையாக இருந்தாலும், தான் கொண்ட கொள்கையை கைவிடவில்லை. பிடிபட்ட பொன்மீனை மீண்டும் கடலில் விட்டார் பக்திமானான அதிபத்தர். அவரது பக்தியை ஏற்ற சிவன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்து நாயன்மாராக ஏற்றுக் கொண்டார்.