பதிவு செய்த நாள்
24
மே
2020
03:05
கோபி: அமாவாசை மற்றும் கிருத்திகையையொட்டி, கோவிலுக்கு சென்ற பக்தர்கள், வாசல்களில் நின்று வழிபட்டு திரும்பினர். கொரோனா ஊரடங்கால், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம் கோவில்களில் வழக்கமாக நடக்கும், கால பூஜைகள் மட்டும் நடக்கின்றன. இந்நிலையில் அமாவாசையும், கிருத்திகையும் நேற்று சேர்ந்து வந்ததால், கோபி, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலுக்கு, காலை, ?:00 மணி முதலே பக்தர்கள் வரத்துவங்கினர். மூடப்பட்ட ராஜகோபுரத்தின் கதவு முன் நின்று, கற்பூரம், தீபமேற்றி வழிபட்டனர். அமாவாசை என்பதால், அந்தியூர், பத்ர காளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவில் வாசலில் நின்று, கற்பூரம், தீபமேற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.
சமூக விலகலின்றி தரிசனம்: கோபி கடைவீதியில், பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. அமாவாசை மற்றும் கிருத்திகையை முன்னிட்டு, நேற்று மாலை, 6:30 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தது. அம்மனை தரிசிக்க, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் முன் கூடினர். இவர்களில் ஓரிருவர் மட்டுமே, மாஸ்க் அணிந்திருந்தனர். பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல், சமூக விலகலை கடைப்பிடிக்காமல் நெருக்கமாக நின்றனர். மாவட்டத்தில், 37 நாட்கள் கழித்து, கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் பக்தர்கள், கொரோனா விதிமுறையை பின்பற்றாதது, வேதனை அளித்ததாக, சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.