பரிபாடல் எழுதிய இளநாகனார் என்னும் புலவர் கேட்கும் வரத்தைப் பாருங்கள். “முருகப்பெருமானே! பொன்னோ, பொருளோ, சுகவாழ்வோ நான் கேட்கவில்லை. என்றும் மாறாத அன்பையும், அருளையும் உன்னிடம் வேண்டுகிறேன். கடம்ப மலர் மாலை சூடியவனே! எப்போதும் உன் திருவடியை வணங்கும் பாக்கியத்தைக் கொடு” என்கிறார். ‘அன்பே தெய்வம்’ என்பதை உணர்ந்தால் மட்டுமே இந்த மனப்பக்குவம் ஏற்படும்.