முருகன் அடியாரான பாம்பன் சுவாமிகள் சாலையில் செல்லும் போது, குதிரை வண்டி மோதியதால் கால் எலும்பு முறிந்தது. அவர் உணவில் உப்பு சேர்ப்பதில்லை என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்புச்சத்து குறைபாடு இருப்பதால், குணமாகும் வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தனர். படுக்கையில் கிடந்த பாம்பன் சுவாமிகள், “முருகா...! நான் உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்” என்ற நம்பிக்கையுடன் சண்முக கவசத்தை பாடி வந்தார். நாளடைவில் மருத்துவரே வியக்கும் விதத்தில் குணம் அடைந்தார். ‘எந்த கடவுளும் கந்தக் கடவுளுக்கு மிஞ்சாது’ என்னும் சுவாமியின் வாக்கு நிஜமாகி விட்டது.