நாகர்கோவில்: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. ஆராட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 5:00 மணிக்கு நடை திறந்தது மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுவார். வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஜூன் 15 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்துவார். பின்னர் வழக்கமான கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, அத்தாழ பூஜை போன்றவை நடைபெறும். 19–ம் தேதி வரை தினசரி பூஜைகள் மட்டும் பக்தர்களின்றி நடைபெறும். பங்குனி மாதம் ரத்து செய்யப்பட்டிருந்த ஆராட்டு திருவிழா ஆனியில் நடைபெறும் என்றும், பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறையாததால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.