Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: வாகன யோகம் மீனம்: அமோக லாபம் மீனம்: அமோக லாபம்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கும்பம்: திடீர் வருமானம்
எழுத்தின் அளவு:
கும்பம்: திடீர் வருமானம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
09:06

இந்த மாதம் சனி, கேது 11ம் இடத்தில் இணைந்து நின்று நன்மை தருவார்கள். சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார்.  புதன் ஜூன் 21ல் இருந்து ஜூலை 3 வரை நற்பலன் கொடுப்பார். பொருளாதார வளம் அதிகரிக்கும். முயற்சி வெற்றி பெறும். .  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் வருமானம் கிடைக்கும். குருபகவான் 12ம் இடத்தில் இருக்கிறார் .அவரால் நற்பலன் தரமுடியாது. அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து   ராசிக்கு 11ம் இடத்திற்கு செல்கிறார்.  இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளன. அதன் மூலம் சுபவிஷயத்தில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.

குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன், பொருள் சேரும்.  பெண்கள் மிக உறுதுணையாக செயல்படுவர். ஜூன் 17க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். ஜூலை 3க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். பெண்களுக்கு உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.  சகோதரவழியில் பணஉதவி கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். அக்கம் பக்கத்தினரிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். ஜூன் 20க்கு பிறகு குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். நற்பெயர் எடுப்பர். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும்.
உடல் நலத்தில்  அக்கறை காட்டவேண்டியது இருக்கும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பொருளாதார வளம் சிறக்கும். புதிய தொழில் அனுகூலம் தரும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலை தொடங்கலாம். ஜூலை 3க்கு பிறகு தொழில் ரீதியாக பயணம் ஏற்படலாம்.
* வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் அதிக லாபத்தை தரும். ஜூலை 7க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வருமானம் காண்பர். * தரகு, கமிஷன் தொழிலில் அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
* தனியார் துறை பணியாளர்கள் சீரான நிலையில் காணப்படுவர். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். இடமாற்ற பீதி மறையும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* மருத்துவர்கள் நற்பலனை கிடைக்கப் பெறுவர். மற்றவர் மத்தியில் நற்பெயரும், மதிப்பும் உயரும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
* வக்கீல்களுக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழில்ரீதியான பயணம் வெற்றி பெறும்.
* பொதுநல சேவகர்கள் நற்பலன் காண்பர். அவர்கள் எதிர்பார்த்த பதவி  கிடைக்கும்.
* கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு மஞ்சள், நெல், கேழ்வரகு, கரும்பு பனை, பழவகைகள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும்
* பால்பண்ணை தொழிலில் போதிய வருமானம் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 7க்கு பிறகு நற்பலனை காணலாம். ஆசிரியரின் அறிவுரை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஜூன் 17க்கு பிறகு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசு வகையில் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தனியார் துறை பணியாளர்கள் ஜூலை 3க்கு பிறகு முக்கிய பணியை அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள்  சற்று கவனமாக பணிபுரிவது நல்லது.
* ஆசிரியர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* அரசு பணியாளர்கள்  வேலைப் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். விடாமுயற்சி செய்தால் கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி ஜூன்17க்கு பிறகு மறையும்.
* போலீஸ், ராணுவத்தினர் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை சந்திக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடி கொண்டிருக்கும்.

நல்ல நாள்: ஜூன் 16,17,18,23,24,25,26,27 ஜூலை 2,3,4,5,9,10,14,15.
கவன நாள்: ஜூன் 28,29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்:
* தினமும் காலையில் நீராடியதும் சூரியவழிபாடு
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு விரதம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அபிேஷகம்

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar