பதிவு செய்த நாள்
14
ஜூன்
2020
12:06
நாகை : திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திரம் (வைகாசி- பூரட்டாதி) மணி விழாவாக ஆதீனத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திரம் (வைகாசி- பூரட்டாதி) மணி விழாவாக ஆதீனத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. குருவருட்செல்வம் என்னும் விழா மலர் வெளியிடப்பட்டது. மணி விழாவை முன்னிட்டு காலை ஆதீன ஆன்மார்த்த மூர்த்தி ஞானமா நடராஜப்பெருமான், குருமுதல்வர் நமச்சிவா ய மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிவப்பிரகாச விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் நடந்தது. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோ யிலில் மகாருத்ர ஹோமம் சிறப்பு வழிபாடுகளுடன் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. விழா மலராக குருவருட்செல்வம் எனும் நூலை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டார். பின்னர் வேணுவனலிங்க விலாசத்தில் சிவஞா ன கொலுக்காட்சி நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடந்தது. ஆதீன கட்டளை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், அருணாச்சல தம்பிரான் சு வாமிகள் ஆகியோர் பூஜைகளை செய்வித்தனர். இதில் தருமை ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் இளைய குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி த ம்பிரான் சுவாமிகள், விருத்தாச்சலம் குமாரசாமி மடம் குருமகாசன்னிதானம், வேளாக்குறிச்சி ஆதீனம் இளைய குருமகாசன்னிதானம், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோ வனம் ஸ்ரீமத் சுவாமி பக்தானந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.