பதிவு செய்த நாள்
18
ஜூன்
2020
01:06
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் இருநாட்களாக இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் எண்ணப்பட்டன. ரூ.54 லட்சத்து 40 ஆயிரத்து 710, தங்கம் 279 கிராம், வெள்ளி 720 கிராம், வெளிநாட்டு ரூபாய் 195 நோட்டுகள் இருந்தன. உதவிகமிஷனர் முல்லை, கூடலழகர் பெருமாள் கோயில் உதவிகமிஷனர் ராமசாமி உள்ளிட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக, 2.53 லட்சம் ரூபாயை செலுத்தி இருந்தனர்.பெருமாநல்லுாரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், ஆய்வாளர் செல்வ பிரியா முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 846 ரூபாய், 37.400 மில்லி கிராம் தங்கம், 43.700 மில்லி கிராம வெள்ளி, ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி மற்றும் தக்கார், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.