பதிவு செய்த நாள்
02
ஜூலை
2020
04:07
கோபி: பச்சமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடைபெறவிருந்த நிலையில், மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோபி அருகே பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில், 1981, 2006களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஆகமவிதிப்படி, இன்று (ஜூலை, 2ல்) மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, உபயதாரர்கள் நிதியாக, 16 லட்சம் ரூபாயில் சிவன் சன்னதி மண்டபம், 36 லட்சம் ரூபாயில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு தனி சன்னதி, பத்து லட்சம் ரூபாயில், ஏழு விமானம், ராஜகோபுரம் அழகுபடுத்துதல், 4.20 லட்சம் ரூபாயில், அன்னதான மண்டபம் கட்டமைப்பு என திருப்பணிகள் நடந்தது. ஊரடங்கால் பணியாளர்களின்றி, கடந்த மூன்று மாதங்களாக திருப்பணிகள் முடங்கின. இதனால், இன்று நடக்கவிருந்த, மூன்றாவது கும்பாபி ?ஷக விழா, ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.