ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் திருக்கோயிலின் ராமர் தீர்த்த குளத்தில் பிளாஸ்டிக் கப், கழிவு குவிந்து கிடப் பதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான பழமை யான ராமர் தீர்த்தகுளம், கோயிலுக்கு வெளிப்பகுதி யில் உள்ளது. இத்தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடி சென்ற நிலையில், தற்போது ஊரடங்கினால் பக்தர்கள் இன்றி குளம் வெறிச் சோடி கிடக்கிறது.தீர்த்த குளத்தை கோயில் நிர்வாகம் சுத்தம் செய்து பராமரிக்காததால், குளத்தை சுற்றி பிளாஸ்டிக் பாட்டில், கப்கள், குப்பை குவிந்து கிடக்கிறது.