Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமரசிம்மன் அனுசூயா அனுசூயா
முதல் பக்கம் » பிரபலங்கள்
ருக்மணி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மே
2012
05:05

உறவு என்று சொல்லிக் கொண்டு நம் வீட்டுக்குள் வந்தவர், எதிரியாக இருந்தாலும் அவமதிக்கக்கூடாது. கடவுளே ஒருமுறை உறவினரை அவமதிக்க, கடவுளுக்கு அண்ணனாக பூலோகத்தில் அவதாரம் எடுத்தவர் அந்தக் கடவுளைக் கண்டித்த கதை இது.

விதர்ப்ப தேசத்து மன்னன் பீஷ்மகன். இவரது மகள் ருக்மணி. ருக்மி என்பவன் உட்பட ஐந்து புத்திரர்கள். விதர்ப்ப நாட்டுக்கு வரும் பக்தர்கள் கிருஷ்ணரைப் பற்றி புகழ்ந்து பாடுவார்கள். இதையெல்லாம் கேட்கும் ருக்மிணி, அந்த கிருஷ்ணர் யாரென்று தெரியாமலேயே காதல் கொண்டாள். அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என கருதினாள். ருக்மணியின் இந்த முடிவை அவளது அண்ணன் ருக்மி எதிர்த்தான். ஏனெனில், அவன் கிருஷ்ணருக்கு எதிரி. சகோதரியை தன் நண்பன் சிசுபாலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தான். திருமண ஏற்பாடுகள் முடிந்து விட்டன. ருக்மணி கண்ணீர் வடித்தாள். அரண்மனையில் இருந்த அந்தணர் ஒருவரிடம் தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி எழுதிய கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பினாள். அன்பரே! நானாக உங்களை நாடி வந்தால் அது தவறான அபிப்ராயத்தை உருவாக்கும். எனவே, நீங்கள் இங்கு வந்துள்ள சிசுபாலனை வென்று என்னைத் தூக்கிச் சென்று திருமணம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வராவிட்டால் நான் இறந்து விடுவேன்.

திருமணத்துக்கு முதல் நாள் அம்பிகை கோயிலுக்கு மணமகளை அழைத்துச் செல்வது எங்கள் நாட்டு வழக்கம். வழிபாடு முடிந்ததும் நீங்கள் என்னை கடத்தி விட வேண்டும், என எழுதியிருந்தாள். கடிதத்துடன் துவாரகை சென்ற அந்தணர், கிருஷ்ணரிடம் கடிதத்தைக் கொடுத்தார். அவளது காதலுக்கு மதிப்பளித்த கிருஷ்ணர், திருமணத்துக்கு முன்னதாக விதர்ப்ப நாடு வந்து, ருக்மணியை அழைத்துச் செல்வதாக பதில் சொல்லி அனுப்பினார். ருக்மணி காத்திருந்தாள். மாயக்கண்ணன் வரவேயில்லை. கண்ணீர் வடித்தாள். மறுநாள் திருமணம். கடைசி நிமிடத்திலும் மனம் தளராமல், கோயிலுக்கு புறப்பட்டாள்.அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்து சேர்ந்தார். தம்பிக்குத் துணையாக அண்ணன் பலராமனும் வந்திருந்தார். கிருஷ்ணர் தன் தங்கையைக் கடத்த ந்திருக்கிறார் என்பதை அறிந்த ருக்மி, படைகளை தயார்நிலையில் வைத்திருந்தான்.கோயிலில் வழிபாடு முடிந்தது. சற்றும் தாமதிக்காமல் ருக்மணியை தன் தேரில் தூக்கி வைத்தார் கிருஷ்ணர். சிசுபாலன் ஸ்தம்பித்து நின்று விட்டான். தேர் பறந்தது. ருக்மி கிருஷ்ணரை விரட்டினான். ஓரிடத்தில் கடும் போர் நடந்தது.

ருக்மி மற்றும் அவனது நட்பு நாட்டு மன்னர்கள் தோற்று ஓடினர். கிருஷ்ணர் ஆவேசமாக ருக்மியை வெட்ட முயன்றார். தன் அண்ணனை விட்டு விடும்படி ருக்மணி கெஞ்சவே, அவனை விடுவித்தார் கிருஷ்ணர். இருந்தாலும், ஒரு கத்தியை எடுத்து ருக்மியின் தலை முடியை மழித்தெடுத்தார். வீரமில்லாத உனக்கு மீசை எதற்கு? எனக் கேட்டு ஒரு பக்க மீசையை எடுத்து விட்டார். இதை கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் தூரத்தில் இருந்து பார்த்து விட்டார். தம்பி! இது முற்றிலும் தவறு. ருக்மி உன் மனைவியின் சகோதரன். உறவினர்களை அவமானப்படுத்துவது மிகவும் தவறு. இனி இப்படி செய்யாதே, என கண்டித்தார். கண்ணன் தன் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் துவாரகை சென்று ருக்மணியை மணந்து கொண்டார்.

உறவினர்களை பிடிக்காவிட்டாலும் கூட, அவர்கள் வீடு தேடி வந்து விட்டால், அவர்களை அவமானப்படுத்தாமல், உபசரிக்க வேண்டும் என்பதே ருக்மணி கல்யாணம் நமக்கு உணர்த்தும் பாடம்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar