திருப்பதியில் திருக்கல்யாணத்தை இனி நீங்களும் பார்க்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2020 08:08
திருப்பதி: திருமலையில் நடைபெறும் உற்சவங்களில் திருக்கல்யாண உற்சாவம் மிகவும் பிரசித்தம் ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்தால் இரண்டு பேர் அனுமதிக்கப்படுவர். திருக்க;ல்யாணத்தை பார்த்துவிட்டு திரும்பும் பக்தர்களுக்கு கல்யாண லட்டு பிளவுஸ்பிட் உள்ளீட்ட பிரசாதங்கள் வழங்கப்படும். இந்த திருக்கல்யாணத்தைக் காண குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்படுவர்.இதனைக்காண எப்போதுமே பக்தர்களிடம் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
ஊரடங்கு காரணமாக தற்போது பக்தர்கள் அனுமதியின்றி திருக்கல்யாணம் நடந்து வருகிறது.தற்போது பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஆயிரம் ரூபாய் அனுப்பி டிக்கெட் பெறுபவர்கள் ஆன் லைன் மூலமாக திருக்கல்யாணத்தை வீட்டில் இருந்தே பார்க்கலாம் பிரசாதங்கள் பின்னர் தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படும்.இது தொடர்பாக மேலும் விவரமறிய www.tirupatibalaji.ap.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று அறிநது கொள்ளலாம்.