பதிவு செய்த நாள்
15
ஆக
2020
11:08
சிந்தித்து செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!
குருபகவான் சாதகமாக உள்ளார். சுக்கிரன் ஆக. 31 வரை உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் இருந்து நற்பலன் கொடுப்பார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். இதனால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்னை, உறவினர்கள் வகையில் மனவருத்தம், பொருள் இழப்பு முதலியன ஆகஸ்டு 29 க்கு பிறகு மறையும்.
ராகு ஆக.31 வரை 11ம் இடமான மிதுன ராசியில் இருந்து பொருளாதார வளம், பெண்களால் அனுகூலம் கொடுப்பார். அதன் பிறகு ராகு 10ம் இடமான ரிஷபத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பு, உடல் உபாதைகளை கொடுப்பார். கேது ஆக. 31 வரை தனுசு ராசியில் அதாவது 5ம் இடத்தில் இருக்கிறார். அங்கு இருந்த அவர் பிள்ளைகளால் பிரச்னையை தந்து இருக்கலாம். இப்போது கேது 4ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல்நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்னை வரும்.
குடும்பத்தில் குருவால் குதுாலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்வில் வளம் காணலாம்.
பெண்களுக்கு கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தம் வருகை இருக்கும். மாத முற்பகுதியில் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரர்கள் மிக உறுதுணையாக செயல்படுவர். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பிடிப்பு நிலை இல்லாத நிலை வரலாம். பணிப்பளுவும் அலைச்சலும் இருக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திப்பர். சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும்.
சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்படலாம். உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் சீரான வளர்ச்சி காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.
* வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* ஆசிரியர்ளுக்கு தேவைகள் பூர்த்தியாகும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். குருவால் கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
* கலைஞர்கள் மாத பிற்பகுதியில் புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு.
* மாணவர்கள் போட்டி பந்தயங்ளில் வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று கல்வியில் வளர்ச்சியடைவர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஆக.31க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் அவப்பெயரை சந்திக்க நேரலாம் கவனம்.
* வியாபாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். விடாமுயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்கவைக்க வேண்டியதிருக்கும்.
* தரகு, கமிஷன் தொழிலில் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும்.
* தனியார்துறை பணியாளர்கள் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இடமாற்ற பீதி மறையும்.
* ஐ.டி., துறையினர் ஆக.31 க்கு பிறகு வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் அலுவலகத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையெனில் வீண்மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
* மருத்துவர்கள் விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்களுக்கு ஆக.29க்கு பிறகு செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.
* அரசு பணியாளர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
* அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.
* விவசாயிகள் கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு,விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
நல்ல நாள்: ஆக.19,20,23,24,25,30,31 செப்.1,2,3,9,10,11,12,16
கவன நாள்: செப்டம்பர் 4,5. சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்.
பரிகாரம்
* செவ்வாயன்று கேதுவுக்கு அர்ச்சனை
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள்தீபம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு