திருவாடானை: நான்கு தலைமுறையாக தேர்களை அலங்கரிப்பதில் முதியவர் ஆர்வமாக பணியாற்றி வருகிறார். திருவாடானையை சேர்ந்தவர் ஆதிமூலம் 85. இவர் திருவிழா நாட்களில் தேர்களைஅலங்கரிப்பதில் வல்லவர். திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. வைகாசியில் வைகாசி விசாகம், ஆடியில் ஆடிப்பூரத்திருவிழா சிறப்பாக நடைபெறும். வைகாசியில் ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரும், சிநேகவல்லி அம்மன் ஒரு தேர் என இரு தேரோட்டமும், ஆடியில் சிநேகவல்லி அம்மன் அமர்ந்த ஒரு தேரோட்டமும் நடைபெறும்.
இத்தேர்களை ஆதிமூலம் அலங்கரித்து வருகிறார்.அவர் கூறியதாவது: நான்கு தலைமுறையாக தேர்களை அலங்கரிக்கிறேன். 50 அடி உயரமுள்ள இத் தேர்களில் முதலில் கம்புகள் கட்டி அதன் பின்வண்ண திரைசீலைகளால் அலங்கரிக்கப்படும்.இரு தேர்களை அலங்காரம் செய்ய 10 நாட்கள் ஆகும். விழாவின் போதுஎங்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை கிடைக்கும். இறைவனுக்கு தொண்டு செய்யும்நோக்கத்தில் பணியாற்றி வருகிறேன், என்றார்.