பதிவு செய்த நாள்
17
ஆக
2020
10:08
திருப்பூர்: சிறிய வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்ட போதிலும், பக்தர்களுக்கு உணவு போன்றவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும், சிறிய வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில், இங்கு பக்தர்கள் குவிய வாய்ப்புகள் உள்ளன. அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பரவல் ஏற்படாமல், வழிபாட்டுத்தல நிர்வாகத்தினர் நடந்துக்கொள்ள வேண்டும். தினமும், மூன்று முறை கிருமிநாசினி மூலம், வழிபாட்டுத்தலங்களை துாய்மைப்படுத்தப்படுவதுடன், நுழைவாயிலில், கைகழுவுவதற்கு தண்ணீர், சோப்பு போன்றவை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.வழிபாட்டுத்தலங்களுக்கு வரும் அனைவரும், முக கவசம் அணிந்து வருவதையும், வளாகத்தில், தனிநபர் இடைவெளி கடைபிடிப்பதையும், உறுதி செய்ய வேண்டும். வழிபாட்டுத்தலங்கள், திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரத்தை எழுதிவைக்க வேண்டும். அதிகளவில் பக்தர்கள் திரளும் வகையில், திருவிழா நடத்தக்கூடாது. வழிபாட்டுத்தல வளாகத்துக்குள் உணவு போன்றவை வழங்கக்கூடாது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.