பதிவு செய்த நாள்
18
ஆக
2020
09:08
வீரபாண்டி: ஆவணி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய தினமான நேற்று, கன்னங்குறிச்சி உலகளந்த பெருமாள் கோவிலில், பட்டச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர்.
சேலத்தில், விஷ்ணுபதி கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், சிறிய கோவில்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பெரிய கோவில்களில், நித்ய பூஜைகளை அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். ஆவணி மாத பிறப்பு விஷ்ணுபதி புண்ணியகாலமான நேற்று, சேலம் கன்னங்குறிச்சி உலகளந்த பெருமாள் கோவிலில், நடந்த சிறப்பு பூஜைக்கு அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் கடைப்பிடித்து, குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து, மீண்டு வர வேண்டி சிறப்பு தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. அதில் வைத்து பூஜித்த கலசங்களின் புண்ணிய தீர்த்தத்தால், தசாவதார பெருமாள் மற்றும் உலகளந்த பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.