திருக்கனுார், : செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நாளை நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நாளை நடக்கிறது.இதனையொட்டி, நாளை மாலை 6:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, எஜமான சங்கல்பம், மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது.வரும் 31ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு ஹோமம், காலை 10:00 மணிக்கு மகா சம்ரோக்க்ஷணம், சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.