பஞ்சாமிர்தத்திற்கு மலைவாழை பழம் பயன்படுத்த வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2020 01:08
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பகுதியில் விளையும் மலை வாழைப் பழத்தை பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க தாண்டிக்குடி மலைவாழைப் பழமே பயன்படுத்தபட்டு வந்தது. அதன்பின்னர் சில ஆண்டுகளில் கொள்முதல் நிறுத்தப்பட்டது.தற்போது தரைப்பகுதியில் விளையும் வாழைப்பழங்களை கொள்முதல் செய்து பயன்படுத்துகின்றனர். இதனால் புவிசார் குறியீடு பெற்றும் மலைவாழைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. விவசாயி சதாசிவம் கூறுகையில், ஊரடங்கால் மலைவாழை விவசாயிகள் பாதித்துள்ளனர். ஊரடங்குக்கு தளர்வுக்கு பின்விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பட பழநி கோயில் நிர்வாகம் மலைவாழை பழத்தைகொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.