திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முகூர்த்த நாட்களில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள், மண்டபங்களில் நுாற்றுக்கணக்கான திருமணங்கள் நடக்கும்.கொரோனா தடை உத்தரவால் ஐந்து மாதங்கள் திருமணங்கள் நடக்கவில்லை. நேற்று ஆவணி வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்பட்டிருந்தாலும் பூட்டிய வாசல் முன்பு 105 திருமணங்கள் மேளம், நாதஸ்வரம் இன்றி நடந்தன. பல திருமணங்களில் மணமக்கள், உறவினர்கள் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி பங்கேற்றனர். ஐந்து மாதங்களுக்குப்பின் நேற்று திருப்பரங்குன்றம் களை கட்டியது.