சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2012 11:05
க.பரமத்தி: க.பரமத்தி யூனியனுக்குட்பட்ட சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி பக்தர்கள் கொடுமுடி சென்று புனித நீர் கொண்டு வந்தனர். இரவு மாவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 16ம் தேதி காலையில் காவடி அழைக்கப்பட்டு அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். மாலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. கடந்த 17ம் தேதி காலையில் 10 மணிக்கு தேர் வடம்பிடித்து பக்தர்கள் கோவிலை சுற்றி இழுந்து வந்தனர். பிறகு கிடாவெட்டு நடந்தது. நேற்று (18ம்தேதி) மஞ்சள் நீராட்டு விழாவுடன் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி மற்றும் இரவு கலைநிகழ்ச்சியும் விழா நிறைவு பெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.