செஞ்சி:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கிது.நேற்று முன்தினம் காலை ரங்கநாதர், தாயாரம்மாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார். காலை 11 மணிக்கு மங்கள இசை முழங்க கருட கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாக்களான கருட சேவை வரும் 21ம் தேதியும், திருத்தேர் வடம் பிடித்தல் 23ம் தேதி காலை 9.15 மணிக்கும் நடக்கிறது.