காரைக்கால்; காரைக்கால் அம்மையார் அவதரித்த நாளை முன்னிட்டு நேற்று அம்மையார; சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது.காரைக்கால் அம்மையார் அவதரித்த நாளை முன்னிட்டு, நேற்று அம்மையாருக்கு அதிகாலை மஞ்சள், பால், தயிர்,சந்தனம, பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இதனால், சிறப்பு பூஜையை கோவில் நிர்வாகம் இணையதளம் மூலம் ஒளிபரப்பியது.