திருப்புத்துார் : திருப்புத்துார் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினர். நேற்று காலை 10:30 மணிக்கு உற்ஸவர் கிருஷ்ணருக்கு பலவித திரவிய அபிேஷகம் நடந்தது. காலமந்திர் கணேஷ் குழுவினர் பரதநாட்டியம்நடந்தது. கிருஷ்ணர் நின்ற கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். கிருஷ்ணர் வேடமிட்டு வந்த குழந்தைகளை கவுரவித்தனர். ஏற்பாடுகளை யாதவ உறவின் முறையினர் செய்திருந்தனர்.