செப்., 17 மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் கடலில் புனித நீராட அனுமதி இல்லை
பதிவு செய்த நாள்
13
செப் 2020 07:09
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில், செப்., 17 மகாளய அமாவாசை அன்று, பக்தர்கள் கூடுவதற்கோ, புனித நீராடவோ அனுமதிஇல்லை, என, கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: புரட்டாசி மகாளய அமாவாசையான, வரும், 17ம் தேதி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நிர்வாகம் சார்பில், வழக்கமான உற்ஸவங்கள் அனைத்தும் நடைபெறும். காலபூஜை, உற்ஸவ நேரங்களில், மக்களுக்கு அனுமதியில்லை.தற்போது, 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், கடற்கரையில் கூடுவதற்கோ, புனித நீராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய தினம், இணையதள முன்பதிவு, கோவில் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் பக்தர்கள், ராமேஸ்வரத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
|